திருக்குறள்

avatar


திருவள்ளுவர்:

பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.இவரின் காலம் கி.மு 31 ம் நூற்றாண்டு என கணக்கிடப் பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி என்பவர் ஆவார்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

திருக்குறள் E0aea410

லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள "ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்" என்னும் கல்வி நிறுவனத்திலும் வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
 
வேறுபெயர்கள்:

நாயனார், தேவர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யா மொழிப்புலவர் என்று பல சிறப்புப்பெயர்களால் திருவள்ளுவர் குறிப்பிடப்படுகிறார்.

திருக்குறள்:

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்.இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் பிரித்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

நூற் பிரிவுகள்

1.அறத்துப்பால்(38 அதிகாரங்கள்)

    பாயிரவியல்-4
    இல்லறவியல்-20
    துறவறவியல்-13    
    ஊழியல்-1

2.பொருட்பால்-70

  அரசியல்-25
  அமைச்சியல்-10
  அங்கவியல்-22
  ஒழிபியல்-13

3.காமத்துப்பால்-25

 களவியல்-7
 கற்பியல்-18

ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

வேறு பெயர்கள்:

உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
_________________
திருவள்ளுவர்

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS