வள்ளுவன் நெறியை காக்கும் வாழை மரங்கள்!வள்ளுவன் நெறியை காக்கும் வாழை மரங்கள்! Tvr%2Bsocial

வாசலில் வாழையை நிறுத்தி, மணப்பந்தலில் மாவிலைத் தோரணம் கட்டி, பந்தியில் பலாச்சுளையைப் பரிமாறி, முக்கனிகளின் பெருமையை முன்னிறுத்தி, வேதங்களை மந்திரங்களாக சொல்லி திருமணங்களை நடத்தியவர்கள்தான் வள்ளுவர் பாரம்பரிய மக்கள்.

வள்ளுவர்கள் ஏன் திருமண வாசலில் வாழையை நிறுத்தினார்கள் தெரியுமா? வாழை மரங்கள் ஒரு முறைதான் பூ-பூத்து தார் விடும்! அதனால்தான் வாழை பயிரிடுபவர்கள் அதிலிருந்து வாழைத்தார் வந்தவுடன் வாழை மரங்களை வெட்டி விடுவார்கள்.

வாழை மரங்கள் எப்படி மறுமுறை தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே திருமண வாழ்வில் இணையும் தம்பதிகள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியவர்கள்தான் வள்ளுவர்கள்!!

அதனால்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள், மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு வாழை மரத்திற்கு தாலி கட்ட செய்து அந்த வாழை மரத்தை வெட்டிவிட்டு அதன்பிறகு திருமணம் செய்து வைத்தார்கள்!! (மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு மறுதாரம் உண்டு என்பது விதி. இதை தடுக்கவே வாழை மரத்திற்கு தாலி கட்டி விதியை மதியால் வென்றவர்கள்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள்)

திருமண வீட்டு வாசலில் வாழைமரத்தை நிறுத்தி வைத்து 3000 ஆண்டுகளுக்கு முன்பே எயிட்ஸ் விளம்பரத்தை நாகரீகமாக செய்த பாரம்பரியம்தான் வள்ளுவர் பிறந்த தமிழர் பாரம்பரியம்!


- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)
_________________
திருவள்ளுவர்

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS