திருக்குறள் பகுப்பும், பிரிவுகளும்திருவள்ளுவர்: [ Thiruvalluvar ]
வள்ளுவப்பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகிலுள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்த கலாச்சாரம் உடையவராயினும், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச் சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்கு உண்டு. திருக்குறளை
பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதைப் பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்ககேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப் பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள் தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!

திருக்குறள் மூன்று பிரிவாக-அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பகுக்கப்பட்டுள்ளது.

1.அறத்துப்பால்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்,

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அரன் வலியுறுத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் தினைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ், அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கல்லாமை, வாய்மை, வெகுளாமை, இன்னசெயாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்ய்ய்னர்தல், அவாவறுத்தல், ஊழ்....ஆகிய முப்பத்தி எட்டு அதிகாரங்கள் இதனில் அடங்கியுள்ளன.

2. பொருட்பால்: அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் :

இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியோரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றந்தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஒற்றாடல், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, அமைச்சு, சொல்வன்மை, வினைத் தூய்மை, வினைத்திட்பம், , வினை செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுதல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை, நாடு, அரண், பொருள்செயல்வகை, படைமாட்சி, படைசெருக்கு, நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகைமாட்சி, பகைத்திறந்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து, குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை...ஆகிய எழுபது அதிகாரங்கள் இதனில் அடங்கியுள்ளன.

3.காமத்துப்பால் (or) இன்பத்துப்பால்: களவியல், கற்பியல்.

தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல், நாணுத் துறவுரைத்தல், அலரறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கள், கண் விதுப்பழிதல், பசப்புறுபருவரல், தனிப்படர் மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவு நிலையுரைத்தல், பொழுது கண்டிரங்கல், உறுப்பு நலனழிதல், நெஞ்சோடு கிளத்தல், நிறையழிதல், அவர் வயின் விதும்பல், குறிப்பறிவுறுத்தல், புணர்ச்சி விதும்பல், நெஞ்சோடு புலத்தல், புலவி, பலவி நுணுக்கம், ஊடலுவகை. ஆகிய இருபத்தி ஐந்து அதிகாரங்கள் இதனில் அடங்கியுள்ளன.:

1330 பாக்கள் உள்ள திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள் 42,194. திருக்குறள் முதன் முதலில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது. குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார். மொத்தம் நூற்றி முப்பத்திமூன்று அதிகாரங்களாகும். 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைத் தந்த வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோமே!!! வாழ்க வள்ளுவம்!!! வளர்க தமிழ்!!!
_________________
திருவள்ளுவர்

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS